Decree of the Bishop
We, Augustine Faisandier, Bishop of Trichinopoly, considering carefully the sacred canons by which it is prescribed to Ordinaries that for the better administration of their dioceses they divide into the same parts to which a particular Rector be appointed; considering furthermore the existing divisions in our diocese which are called “Pangoos” to now have the essential things which they require for the establishment of a parish, namely, a fixed territory at least through villages, a church sufficiently suitable for parochial services, as well as their own pastor who resides there and carries out the care of souls with the faculty and office of administering the sacraments, keeping the parish books, etc., hoping moreover, with Divine Providence assisting and the generous cooperation of the faithful, those things which are necessary not to be lacking, have determined to declare said existing Pangoo divisions in our diocese [to be] parishes and in as much as is necessary to erect [them] into parishes. Therefore having heard the assembly of our diocesan consultors [lit. with the assembly of our diocesan consultors having been heard] according to the norm of the Canons as well as the decree of the Sacred Congregation for the Propagation of the Faith given the 9th of December, 1920, to the praise of Almighty God and of our Redeemer Jesus Christ, and also the having invoked the help of Mary Immaculate, Patroness of this diocese, of St. Francis Xavier, Apostle of the Indies, and of the patrons of our churches, through the present letter given under our seal, we have established said division Malayadipatti a movable parish with all the rights and privileges which correspond in law to parishes. To them nevertheless, along with the decree of the Sacred Congregation of the Propagation of the Faith given above, “are also applied those things which have been peculiarly established concerning quasi-parishes.” We decree moreover the church under the title “St. Francis Xavier” to be a parochial church with the right and office of having a baptismal font, of preserving the Most Holy Sacrament, etc.; and the rest of the churches or chapels to be annexed to it as subsidiaries and also dependent upon it.
May God grant that this parish now declared and established in a more solemn way lead to the greater glory of God and the salvation of souls.
Given at Trichinopoly the 28th day of the month of January, of the year 1924.
ஆணை விளக்கம்
08-01-1938-இல் திருச்சி புதிய மறைமாவட்டமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது (மதுரை தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டது), இவ்விரு ஆலயங்களும் ஒரு குடையின் கீழ் கொணரப்பட்டு, 28-01-1934-இல் புதிய மலையடிப்பட்டி பங்காக செயல்படுவதற்கான ஆணை அப்போதைய ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியர் (Augustine Faisandier) ஆண்டகையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய திருச்சி மறைமாவட்டத்தின் அங்கமாக இன்று வரை செயல்பட்டு வருகிறது.
புதிதாக உருவாகிய திருச்சி மறைமாவட்டத்தின் கீழ், மலையடிப்பட்டி பங்கின் முதல் குருவாக பதினோறு ஆண்டுகள் பணியாற்றியவர் தந்தை Fr. I. அருளானந்தம் அடிகளார். புதிதாக உருவாக்கம் பெற்ற இப்பங்கின் பல்வேறு வகையான அலுவல் சார்ந்த கட்டமைப்புகளை தந்தையவர்கள் முன்னெடுத்தார்கள்.
இக்காலகட்டத்தின் போது, மலையில் முதல் முதலாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது (கரடு முரடாண படிகள்). முத்தப்புடையான்பட்டியைச் சார்ந்த திரு. அருளாந்து உடையார் அவர்கள், தன் வாழ்வில் தூய தோமையார் வழியாக பெற்ற ஒரு புதுமையின் நேர்த்திக் கடனாக, இந்த அரிய பணியை முழுஉபயமாக செய்து கொடுத்தார். இப்படிக்கட்டு 05-04-1938 அன்று திறந்து வைக்கப்பட்டு, இறைமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
மேலும் பல பங்குகளின் அரும்பெரும் இறைப்பணிகளை நிறைவேற்றிய தந்தையவர்கள்01-02-1956 தன் இன்னுயிர் நீத்தார்.
இருங்களூர்-புறத்தாக்குடியின் மண்ணின் மைந்தரான தந்தையவர்கள், கும்பகோணம் மறைமாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், திருச்சி R.C. மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற காரணத்தால், திருச்சி மறைமாவட்டத்தில் இறையழைப்பை ஏற்று ஆன்மீகப்பணியாற்றினார்.
1940-1946 வரை 6 ஆண்டுகள் மலையடிப்பட்டி பங்கின் இரண்டாவது பங்கு குருவாக சிறப்பாக பணிபுரிந்தார். 1934 - இல் பஞ்சம்பட்டி பங்கிலிருந்து (திண்டுக்கல்), A. வெள்ளோடு தனிப்பங்காக பிரிந்த போது, தந்தையவர்கள் 1940 வரை 6 ஆண்டுகள் முதல் பங்குத்தந்தையாக சிறப்பாக பணியாற்றினார். அங்கிருந்து மாற்றலாகி மலையடிப்பட்டி பங்கிற்கு வந்தார். அமைதி சொரூபமான தந்தையவர்கள், தன் எடுத்துக்காட்டான வாழ்க்கை முறைகளால் மக்களை நல்வழியில் நடத்திச் சென்றார். ஆன்மீக வாழ்வு மக்கள் மனங்களில் வேரூன்ற வித்திட்டார். தனது இறுதி நாட்களில் தூய வளனார் பதிப்பகத்தில் ஆன்மீக குருவாக பணியாற்றி 03-01-1970 அன்று இறையடி சேர்ந்தார்.
1946-1948 இல் Fr. A. தாமஸ் அடிகளார் மூன்று ஆண்டுகள் இப்புதிய பங்கில் இறைப்பணியாற்றினார். 1947-இன் இந்திய சுதந்திரம் இவர் பணிக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய இந்திய அரசியல் வரலாற்று நிகழ்வாகும். இவருடைய பணிக்காலத்தின் போது மக்களை ஆன்மீகப் பாதையில் கட்டியெழுப்பினார். தந்தையவர்கள் அன்னை மரியாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்; “மாதாவைப் பற்றிப் பேச தயாரிப்பு அவசியமா; அழகு சௌந்தரியான அவரைப் பற்றிப் பேசினால் வார்த்தைகள் தானாக வந்து விழாதா” என்று அடிக்கடி தன் மறையுரைகளில் கூறுவார். இது உண்மையும் கூட - எவ்வாறெனில், இயல்பிலேயே சிறிது திக்கிப் பேசும் இவர், மாதாவைப் பற்றி மறையுரைகள் வழங்கும் போது தன்னை மறந்து, ஒரு இலக்கிய வாதியைப் போல பிரசங்கிப்பார் என்பதனை அப்போது வாழ்ந்த மக்கள் தற்போதும் நினைவு கூறுகின்றனர்.
இங்கிருந்து மாற்றலாகி உலக மீட்பர் ஆலயத்திற்குச் சென்ற பின்பு, அங்கு சகாயமாதா பக்தி முயற்சிகளை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். இதனடிப்படையில் நோக்கும் போது, மலையடிவாரத்தில் இருக்கும் புனித சகாயமாதா குருசடி இவரால் கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்கிறோம். (சிற்றாலயங்கள் வரலாற்றில் விவரிக்கப்பட்டிருப்பது போல, இச்சிற்றாலயமானது தொடக்கம் முதல் சறுக்குப்பாறைக்கு கீழிருந்த முள்ளிப்பாடி மறைப்பணித்தளத்திலிருந்தது. தந்தை தாமஸ் அடிகளாரின் காலத்தில், தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம்.)
பிற்காலத்தில் தந்தையவர்கள் ஆயர் தாமஸ் ஆண்டகையின் முதன்மை குருவாக 1970-1982 வரை சிறப்பாக பணியாற்றினார். (மலையடிப்பட்டியில் பணியாற்றிய பலரும் பிற்காலத்தில் முதன்மைகுருக்களாக பணியேற்பதை பிற்கால வரலாற்றில் காணலாம் : எ.கா - Fr. தாமஸ், Fr. தாமஸ் பால்சாமி & Fr. T. யூஜின்)
இறுதியாக தவசிமடை பங்கு குருவாக பணியாற்றி, தூய வளனார் பேராலயத்தில் இறுதி ஓய்வு நாட்களைக் கழித்து, 02-09-2000 அன்று தன் இன்னுயிர் துறந்தார்.
1949-1962 இல் தந்தை K.V. பீட்டர் அவர்கள் இப்பங்கில் சிறந்த ஆன்மீகப் பணியாற்றினார். இவர் தற்போதைய திண்டுக்கல் மறைமாவட்டத்தின் சிலுக்குவார்பட்டியின் மண்ணின் மைந்தர். இவருடைய பணிக்காலத்தின் போது 1962-இல் மணப்பாறை தனிப்பங்காகப் பிரிந்து, மறைவட்டமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.
தந்தையவர்களின் இப்பணிக்காலத்தின் போது, தூய சவேரியார் பள்ளியின் மாணாக்கர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததாலும், பள்ளியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற மக்களின் தேவைகருதியும், இத்துவக்கப்பள்ளியானது நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. இதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக, 1959-இல் பனிமய அன்னை ஆலய வளாகத்தில் ஓர் ஓட்டுப் பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. அதுவும் போதாததால், பனிமய அன்னை ஆலயமும் வகுப்பறைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
Fr. மரியானந்தம் அவர்கள் 1962-1973 வரை12 ஆண்டுகள் பணியாற்றினார்கள். இவர் மலையடிப்பட்டியின் கிளைப்பங்கான மலைத்தாதம்பட்டியின் மண்ணின் மைந்தர். இப்பங்கின் மண்ணின் மைந்தரே, இப்பங்கிற்கே அருட்பணியாளராக நியமிக்கப்பட்ட சிறப்பு இவருக்கு மட்டுமே உண்டு.
தந்தையவர்கள் தூய தோமையார் மீது அதீத நம்பிக்கையும், பக்தியும் உடையவர்கள். எனவே இவரது பணிநாட்களின் போது, தோமையார் திருத்தல மேம்பாட்டுப் பணிகள் முதல் முறையாக வித்திடப்பட்டன. இதுவரை நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும், கிராமத்தில் அமைந்துள்ள இரு பெரும் ஆலயங்களை மையமாகக் கொண்டே நிகழ்ந்து வந்துள்ளன. புனித தோமையார் ஆலயத்தின் வளர்ச்சிப் பணிகளை தொலைநோக்குப் பார்வையுடன் முதன்முதலில் முன்னெடுத்தவர் என்கிற வகையில், இவரே இத்திருத்தலத்தின் ‘முன்னோடி’ என்று மொழிவதில் எந்த ஐயமும் இல்லை.
1938-இல் அருளாந்து உடையாரால் அமைக்கப்பட்ட, கரடு முரடான படிக்கட்டுகள் சீராக்கப்பட்டு, புதிதாக பதிக்கப்பட்டன. 1972-இல் அர்ச்சிக்கப்பட்டு, திறக்கப்பட்ட இப்படிக்கட்டுகள் எவ்வித மாற்றமுமின்றி இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அதுவரை, கோவிலின் எதிர்ப்புறம் இரண்டு பெரிய ஆலமரங்கள் இருந்தன. அந்த இரு ஆல மரங்களும் வெட்டப்பட்டு, கோவிலின் முன்புறம் முழுவதும் சமன் செய்யப்பட்டு மக்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு திறந்த வெளி மைதானமாக மாற்றப்பட்டது. மேலும் இந்த மைதானம் அமைப்பு நிலையாக இருப்பதற்கு ஏதுவாக, கோவிலை சுற்றிலும் உயரமான கருங்கற்களால் மதில்சுவர் அரண் அமைக்கப்பட்டது. இந்த அரண் இல்லையெனில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புண்டு.
மேலும், மலையடிவாரத்தில் புனித தோமையாரின் இந்திய வருகையின் 19-ஆம் நூற்றாண்டின் நினைவாக ஓர் அலங்கார வளைவும், புனித தோமையார் திருச்சிலுவை பொறித்த புனித தோமையார் குருசடியும் கட்டப்பட்டன (விரிவான விளக்கங்களை புராதன சின்னங்களில் காண்க).
இதே காலகட்டத்தில், 1967-இல் அரசினர் உயர்நிலைப்பள்ளி மலைக்கு வடக்கே செயல்படத் தொடங்கியது. இதன் காரணமாக, தூய சவேரியார் நடுநிலைப்பள்ளி மீண்டும் துவக்கப்ப்ள்ளியாக மாற்றம் கண்டது. பள்ளியின் வலது புறமிருந்த அன்னதானச் சத்திரம் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு, 4-5 வகுப்புகளாக செயல்படத் தொடங்கின.
இதே காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான வரலாற்று நிகழ்வு 'இரண்டாம் வத்திக்கான் சங்கம்'. 11 அக்டோபடர், 1962 தொடங்கி, 8 டிசம்பர் 1965 வரை உரோமையில் நடைபெற்ற இத்திருச்சங்கத்திற்குப் பிறகு நம் வழிபாட்டு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டன. அவற்றின் மிக முக்கியமானவை இரண்டு: அதுவரை லத்தீன் மொழியில் மட்டுமே நடைபெற்ற திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடைபெறத் தொடங்கின. மேலும், பீடத்தை நோக்கியவாறு குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் முறை மாறி, மக்களை நோக்கியவாறு, அவர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் வந்தது. இதே போன்று மேலும் பல மறுமலர்ச்சிகளும் வழக்கத்திற்கு வந்தன.
தந்தை சேவியர் தனராஜ் அவர்கள் 1973-ஆண்டு ஓராண்டு மட்டும் இப்பங்கில் பணியாற்றினார். இவர் திண்டுக்கல், கொசவபட்டியின் மண்ணின் மைந்தர். இவரின் இக்குறுகிய பணிக்காலத்தின் போது, இறைமக்களின் ஆன்மீக வாழ்வைச் செம்மையாக்குவதற்கான எல்லா முயற்சிகளையும் தங்கு தடையின்றி செய்து வந்தார்.
மலையடிப்பட்டி மறைத்தள வளர்ச்சியில் தந்தை பத்திநாதர் அவர்களின் பங்கு இன்றியமையாதது. 19-ஆம் நூற்றாண்டின் மைய அடையாளமாக அருட்பணி. பெனடிக்ட் புர்தி (1853-1895) அவர்களைக் கருதினால், தந்தை பத்திநாதர் அவர்களை 20-ஆம் நூற்றாண்டின் மைய அடையாளம் என அழைப்பது சாலச் சிறந்தது. தந்தையவர்கள், மலையடிப்பட்டியிலிருந்து உருவான ந.பூலாம்பட்டியின் மண்ணின் மைந்தர். சிறு வயதிலிருந்தே இவருக்கும் இம்மணிணிற்கும் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக, தன்னையும் ஒரு மண்ணின் மைந்தராகவே கருதினார்; அவ்வாறாகவே பணிபுரிந்தார் - இவரது அனைத்து பணிகளிலும் இது என் சொந்த மண் என்கிறஒரு வாஞ்சை இருக்கும். எளிமையின் சிகரமாக வாழ்ந்த தந்தையவர்கள் இரு முறை (11 ஆண்டுகள்) இம்மறைத்தளத்தின் அருட்பணியாளராக பணிபுரிந்துள்ளார்கள்.
தந்தையவர்களின் இம்முதல் பணிக்காலத்தின் போது, தூய தோமையார் மலையைச் சுற்றி ஒரு மண் சாலையானது, மலை உச்சி வரை செல்லுமாறு, பாறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டது (பின்னாட்களின் இது தார் சாலையாக மாற்றப்பட்டது). இக்காலகட்டத்தில் தான் பாஸ்கா மேடைக்கு இடபுறாமாக முதல் ஆலமரம் நடப்பட்டு, பின்னாட்களில் அருளானந்தர் பக்தி முயற்சியாக உருவெடுத்தது.
இதே காலகட்டத்தில், சுவாமி குளம் தூர்வாரப்பட்டு உட்புறமுள்ள கிணறும் ஆழப்படுத்தப்பட்டது. அரசாங்க உதவியுடன், குளக்கரையில் அமைந்திருந்த கிணறு கற்கள் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வலுப்படுத்தப்பட்டு, குடிநீர் மேல்தேக்கம் கட்டப்பட்டு குழாயகளும் அமைக்கப்பட்டன. இவற்றைத் திறந்து வைக்க அப்போதைய ஆளுநர் K.K.ஷா அவர்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தகுந்தது.
திண்டுக்கல், தவமடையின் மண்ணின் மைந்தரான, தந்தை S. R. ஆண்டனிசாமி அவர்கள் 1977 முதல் 1980 வரை பங்கு தந்தையாக பணியாற்றிய பொழுது, பாஸ்கா சார்ந்த சில முன்னெடுப்புகள் நடந்தேறின.
தந்தை அவர்களுக்கு கலை சார்ந்த துறைகளில் நாட்டம் அதிகம். எனவே அவரது பெரு முயற்சியினால் பங்கு மக்களின் நிதி உதவியோடு, தற்போதுள்ள பாஸ்கா மேடையானது பிரம்மாண்டமான அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் பழைய தமிழில் நடிக்கப்பட்டு வந்த பாஸ்கா நாடக வரிகளானது தந்தை அவர்களின் வேண்டுதலின் படி, மண்ணின் மைந்தர் சகோ. ஸ்டீபன் கஸ்பார் அவர்களால் புதுத் தமிழாக்கம் செய்யப்பட்டது.
மேலும், தோமையார் திருவிழா மற்றும் பாஸ்குத் திருவிழாவின் இரண்டாம் திருப்பலி (09.00 am) மண்ணின் மைந்தர்கள் திருப்பலியாக அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது.
இதே காலகட்டத்தில், நவம்பர் 12, 1977 - இரவில் ஏற்பட்ட பெரும் புயல் காரணமாகவும், அதனால் பெய்த பேய்மழை காரணமாகவும், தமிழகம் முழுவதும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரும் பொருட்சேதமும், உயிர்சேதங்களும் ஏற்பட்டன. இவ்வெள்ளத்தினால், (மேடான பகுதியில் அமைந்துள்ளதால்) மலையடிப்பட்டி கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையெனினும், மலைக்குவடக்கே, கோரையாற்றையொட்டி அமைந்திருந்த, வடதோட்ட குடியிருப்புகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன. சில உயிர்களும் பரிபோனது.
தந்தையவர்கள் மேலும் பல ஆண்டுகள் பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றி, 05-04-2016 தன் இன்னுயிர் துறந்தார்.
9. Fr. S. பத்திநாதர்
அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் இந்த இரண்டாம் கட்ட (1980-1985) பணிக்காலத்தின் போதும், பல்வேறு ஆக்கப்பூர்வமான வளர்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 30-12-1984 அன்று கல்லறைத்தோட்டம் புணரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மலையடிவாரத்தில் தூய ஆரோக்கிய மாதா சிற்றாலயமானது, மக்களின் தன்னெழுச்சி பக்தி முயற்சியால் உருவானது.
1985-ஆம் ஆண்டு, தூய சவேரியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, மக்களின் ஏக ஆதரவுடன், ஆலயமானது மீண்டும் சுண்ணாம்புக் காரையால் பூசப்பட்டு, புதுப்பித்து வர்ணம் பூசப்பட்டது. ஆலயம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மலம்பட்டி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
வரலாற்று ஒற்றுமையும் பெயர்க் குழப்பமும்
இதில் ஒரு குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஒற்றுமையை இப்பங்கு மக்கள் இன்று வரை நினைவு கூறுகின்றனர்: அது யாதெனில், நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வாலயத்தை கட்டியவர் தந்தை பெனடிக்ட் புர்தி; இதில் புர்தி எனும் சொல் வழக்கொழிந்து பெர்த்தி அல்லது பர்த்தி என்றழைக்கப்பட்டு, இறுதியில் பத்தி சாமி அல்லது பத்திநாதர் என்றானது. இன்றுவரை மக்கள் இவரை இப்பெயராலேயே அறிகின்றனர். இது ஒருபுறமிருக்க, நூறு ஆண்டுகளுக்குப் பின், இதே ஆலயத்தை மறுசீரமைப்பு செய்த குருவின் பெயரும் ‘பத்திநாதர்’ (பூலாம்பட்டி மண்ணின் மைந்தர்).
மேலும், இப்பங்கில் அதிகபட்சமாக 43 ஆண்டுகள் பணிபுரிந்தவர் தந்தை பெனடிக்ட் புர்தி; இவரின் பணிக்காலத்தின்போது ஏராளமான மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவருக்குப் பின் அதிக பட்சமாக பத்து ஆண்டுகள் (இரு முறை) பணியாற்றியவரும் பத்திநாதர்; இவரின் காலகட்டத்திலும் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ஒரு அரிய வரலாற்று மீட்சியாகக் காணலாம் - The History Repeats.
இதன் காரணமாக, மலையடிப்பட்டி பங்கு மக்களின் மனதில் இவ்விரு சிறந்த ஆளுமைகளும், 18 & 19 ஆம் நூற்றாண்டுகளின் இம்மறைத்தள வரலாற்று அடையாளமாகவே திகழ்கின்றனர் என்பதை மறுக்க இயலாது. எனினும், மக்களின் அறியாமை காரணமாகவும், ‘ஒரே-பெயர்’ குழப்பத்தினால், இரு பத்திநாதர்கள் இருந்துள்ளனர் என்ற அறியாமையும் இத்தலைமுறையினரிடையே உள்ளது குறிப்பிடத்தகுந்தது.
தந்தையவர்களின் இறுதி நாட்களில், புத்தாநத்தம் துணைப் பங்கின் பொறுப்பு குருவாக பணியாற்றிய போது 31-08-2009 அன்று இறையடி சேர்ந்தார்.
பாலக்குறிச்சி மண்ணின் மைந்தரான தந்தையவர்கள், மணப்பாறை மறைவட்டத்திலுள்ள பல பங்குகளில், பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். மலையடிப்பட்டியில் (1985-1986) பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் ஆன்மீக வாழ்வை முன்னேற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்விற்கு அடித்தளமிட்டார்.
தந்தையவர்கள் பின்னாட்களில், மணப்பாறை மறைவட்ட அதிபராக பணியாற்றிய காலத்திலும், இம்மறைத்தளத்தின் மீது தனிப்பட்ட பாசம் கொண்டிருந்தார். பிற்காலத்தில், உலக மீட்பர் ஆலயத்தில் பணிபுரிந்த போது, இவரின் முயர்சியினாலும், கடும் உழைப்பினாலும் அவ்வாலயம் பசிலிக்கா நிலைக்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தந்தை சவேரியார் அவர்கள் 1986-1989 வரை நான்கு ஆண்டுகள் இம்மறைத்தளத்தில் அரும்பணியாற்றினார். கொசவபட்டி மண்ணின் மைந்தரான தந்தையவர்கள், மலையடிப்பட்டி பங்கின் பாதுகாவலரின் நாமத்தை தன் பெயராகக் கொண்ட காரணத்தினால், சவேரியார் மீதும் இவ்வாலயத்தின் மீதும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அன்பும், பொறுமையும் தன் குணநலன்களாக கொண்ட தந்தையவர்கள் தன் எடுத்துக்காட்டான கிறிஸ்துவ வாழ்வாலும், தாக்கங்கள் நிறைந்த மறையுரைகளாலும் மக்களை நல்வழியில் நடத்தி வந்தார். மேலும் பல ஆண்டுகள் திருச்சி மறைமாவட்டத்தின் பல பகுதிகளிலும் இறைப்பணியாற்றிய தந்தையவர்கள், 31-03-2011 அன்று இறையடி சேர்ந்தார்.
தந்தையைக் குறித்து வரையறுக்க எண்ணும் போது, ‘பைபிள் தேவராஜ்’ எனும் இவரின் அடைமொழியே முதலில் நினைவிற்கு வரும். இன்று வரை இவர் இப்பெயரிலேயே அறியப் படுகிறார். திருவிவிலியத்தின் மீது தணியாத தாகம் கொண்டவர்; இத்தாகத்தை எப்படியாவது மக்களிடமும் விதைக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டவர். தந்தையவர்கள் திண்டுக்கல், அனுமந்திராயன் கோட்டையின் கிளைப்பங்கான மேலப்பட்டியின் மண்ணின் மைந்தர்.
திருவிவிலியம் இல்லாமல் ஒருவரும் திருப்பலியில் பங்கேற்க முடியாது. பீடத்திலிருந்தே பெயர் சொல்லி அழைத்து, வீட்டிற்குச் சென்று திருவிவிலியத்தை எடுத்து வருமாறு அனுப்பி விடுவார். மேலும், அனைத்து குடும்பங்களுக்கும் திருவிவிலியம் வழங்கும் நோக்கில், குறைந்த விலையில் விவிலியத்தை அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகித்தார். குழந்தைகள் மீது சிறப்பு அக்கரை எடுத்து அவர்களை ஆன்மீக வழியில் நடத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். இவரின் இப்பணிக்காலத்தின் போது, 1992-இல் ஆவாரம்பட்டியானது தனிப்பங்காக, மலையடிப்பட்டியிலிருந்து பிரிந்தது.
1989-1993 வரை நான்கு ஆண்டுகளாக இவ்வரிய ஊழியங்களைச் செய்த தந்தையவர்கள், அக்காலகட்டத்தில் மலையடிப்பட்டிக்கும், மலையடிப்பட்டிக்கும் இடையே தொடர்ந்து கொண்டிருந்த திருவிழா தொடர்பான சச்சரவுகளால், மனம் வெதும்பி மார்ச் மாதத்தில் வெளியேறினார்; இந்நிகழ்வு இன்று வரை இறைமக்கள் மனதில் ஆற்ற முடியா வடுவாக உள்ளது.
1993-இல் தந்தை தேவராஜ் அவர்களின் பங்கிலிருந்து சென்ற பிறகு, புதிய பங்கு குருவானவர் ஜூன் மாதத்தில் தான் பணியேற்பார் என ஆயரில்லத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பங்குத்தந்தை இல்லாமல், அந்த வருட திருவிழாவை யார் நடத்துவது, என்ற குழப்பம் மக்கள் மனதில் எழுந்தது.
இந்நிலையில் அப்போது மாரம்பாடியில் பங்குகுருவாக பணியாற்றிக் கொண்டிருந்த இம்மண்ணின் மைந்தரான Fr. ஸ்டீபன் கஸ்பார் அவர்கள், இம்மூன்று மாதங்களுக்கு (மார்ச்-மே) மட்டும் பொறுப்பு தந்தையாக நிர்வகித்தார். 15-18, மார்ச் 1993 -இல் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்தார்; மேலும், மண்ணின் மைந்தரான Fr. G. சகாயராஜா அவர்களின் முதல் நன்றித் திருப்பலி கொண்டாடத்தினை 21-04-1993 அன்று மிகச் சிறப்பாக முன்னெடுத்தார். பொறுப்பு பங்குத் தந்தையாக இறைமக்களுக்குத் தேவையான அனைத்து திருவருட்சாதனங்களையும் நிர்வகித்து வந்தார்.
இதற்குப்பின், 1993-இல் ந.பூலாம்பட்டியின் மண்ணின் மைந்தரான, தந்தை தாமஸ் பால்சாமி அவர்கள் இப்பங்கின் பணியாளராக பொருப்பேற்றுக் கொண்டார். அமைதியும், சாந்தமும் உருவான தந்தையவர்கள் பணியாற்றிய இம்மூன்றாண்டுகள், அவரைப் போலவே பங்கினை அமைதியில் வழிநடத்தினார். மக்களில் தேவைகளின் உற்ற தோழனாகவும், அவர்கள் குடும்பங்களில் ஒருவராகவும் வாழ்ந்து வந்தார். இவரின் பணிக்காலத்தின் போது தான், புதிய கொடிமரம் ஒன்று தேர்நிலைக்கு அருகில் நிறுவப்பட்டது.
பின்னாட்களில் திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மை குருவாக பணியாற்றி, 11-04-2016 அன்று திண்டுக்கல் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, அரிய பல இறைப்பணிகளை ஆற்றி வருகிறார். மலையடிப்பட்டியின் சேய்ப்பங்க்கான, ந.பூலாம்பட்டியின் மண்ணின் மைந்தர் என்ற வகையிலும், இவர் இப்பணித்தளத்தின் பங்குகுருவாக பணியாற்றினார் என்ற முறையிலும், இவரால் இப்பங்கிற்கு பெருமை கிட்டியுள்ளது என மொழிந்தால் அது மிகையாகாது.
திண்டுக்கல், கோம்பையான்பட்டி மண்ணின் மைந்தரான தந்தை மரிய அற்புதம் அவர்கள் (1995-1998) நான்கு ஆண்டுகளே பணியாற்றியிருந்தாலும், சில முக்கியமான பணிகளைச் செய்து முடித்திருக்கிறார். இதில் முதன்மையானது பழைய தேர் பயன்படுத்த முடியாத நிலையில், 1995-இல் புதிய தேர் ஒன்று பத்தே மாதங்களில் செய்யப்பட்டு, அந்த வருடமே பயன்பாட்டிற்கு வந்தது. பனிமய அன்னை ஆலயத்திற்கு அருகில் இருந்த வாசாப்பு மேடை என்னும் பிரசங்கத்தொட்டியினை, உயிர்த்த ஆண்டவர் கெபியாக புணரமைத்தார்.
தூய தோமையார் திருத்தல ஆலயத்தின் பீடத்திற்கு முன்பாக உள்ள விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் அதுவரை மேற்கூரை ஏதும் இல்லை. Fr. I. ஆரோக்கியம் அடிகளாரின் நிதி உதவியுடன் காங்கிரீட் மேற்கூரை அமைக்கப்பட்டு சுற்றிலும் சிமெண்ட் பூசி அழகுபடுத்தப் பட்டது. மேலும், மலையைச் சுற்றியுள்ள மண் சாலை, அரசாங்க உதவியுடன் தார் சாலையாக மாற்றப்பட்டது.