"உன்னை நீயே அறிந்து கொள்" - சாக்ரடீஸ்
"All of our History is the work of God-None of it is accidental. Our story is the story of God working in the World. That's why history is precious. That's why we keep it."
வரலாறு என்பது கதையன்று; அது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின், பாரம்பரியத்தின் அடையாள வாகனம். வரலாறு என்பது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும்; இல்லையெனில் அது மறக்கப்படும் - மறக்கடிக்கப்படும்.
பழைய ஏற்பாட்டில், ஒவ்வொரு பாஸ்காவின் போதும், இஸ்ரயேல் மக்கள் தங்கள் இனத்தின் வரலாற்றை, தங்கள் அடுத்த சந்ததியினருக்கு பாடலாக கூறுவர் - அதனை இளைய தலைமுறையினர் மீண்டும் கூறுவர். இவ்வாறு தங்கள் இன வரலாற்றினை மனனம் செய்து, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தினர். இம்மரபு இன்றும் யூத மக்களிடையே தொடர்கிறது.
ஒரு சமுதாயத்தின் வரலாற்றை, தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்துவது, அச்சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. இங்கனமே, தமிழ் இலக்கிய தழுவல்களின் வழி தொடர்ந்த வரலாற்று கடப்புகளால் தான், பழம்பெரும் தமிழ் நாகரிகம் என்று நாம் இப்பொழுதும் மார்தட்டிக் கொள்ள இயல்கிறது. இல்லையெனில், தமிழ் நாகரிமே ஒரு கட்டத்தில் அழிந்து போயிருக்கும்; அழிக்கப்பட்டிருக்கும்.
வரலாறு என்பது ஒரு பொக்கிஷம். இன்றைய நிகழ்வே நாளைய வரலாறு. வரலாறு பேரினங்களுக்கு மட்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பதில்லை - அரசர்களின், நாடுகளின் போர்கள் மட்டும் தான் வரலாறு என்றெண்ணினால் அது மடமை. குறுகிய நிலை (உள்ளூர்) வரலாறுகளும் துளிர்க்க வேண்டும்; சமகால வரலாறு எழுதப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்தின் வரலாறு அறியப்பட வேண்டும்; அன்றாட நிகழ்வுகள் பதியப்பட வேண்டும் - இதுவே பிந்தைய வரலாற்றுப் பதிவாக மாறும்.
கிராமம் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் வரலாறு அறியப்பட வேண்டும் (எ.கா: 'பட்டையதார் பரம்பரை பதிவரைவு'); ஒவ்வொரு தனி மனித வரலாறுகளும் அறியப்பட வேண்டும். வரலாறுகள் உருவாக்கப்படுவதில்லை - வரலாறுகள் பதியப்படுகின்றன. (மேற்கத்திய கலாச்சாரத்தில் இத்தகு வரலாற்றுப் புரிதல்கள் மிக ஆழமாக உள்ளது; ஏனோ, இந்திய மண்ணில், வரலாற்றின் முக்கியத்துவம் அந்தளவிற்கு உணரப்படுவதில்லை என்பது வருத்தமான உண்மை)
இத்தகு எண்ணங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம். 350 ஆண்டு பழமை வாய்ந்த - நான் பிறந்து, தவழ்ந்து, மகிழ்ந்த எம்மண்ணின் புழுதியின் வரலாறும், பெருமையும் இதுவரை யாரலும் பதிவு செய்யப்படவில்லை என்பதை அறியும் போது மனம் வேதனையுறுகிறது. இதனை உலகறியச் செய்யவது, மண்ணின் மைந்தனான எனது தலையாய கடமை என உணர்ந்தேன்.
"நாடு உனக்கு என்ன செயதது என வினவாதே! நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என எண்ணிப்பார்," எனும் மூத்தோர் சொல்லுக்கிணங்க, நான் பிறந்த இம்மண்ணுக்கு, என்னால் தற்போதைக்கு இயன்ற செயலாக - என் பெருமைமிகு கிராமத்தின் வரலாற்றை, எண்ணிம (Digital) வழியில் பதிவு முயற்சியே இவ்விணையதளம். கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தில், நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் நோக்கில் தொடங்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இப்படைப்பு!
இவ்விணையதளத்தில், மலையடிப்பட்டி மண்ணின் 350 ஆண்டுகால வரலாறானது, கிடைத்த, சேகரித்த, நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், வரலாற்று ஆவணங்கள், செவி வழி அறிந்த மற்றும் மூத்தோரிடம் கேட்டறிந்த தகவல்களைக் கொண்டு, முறையாக தொகுக்கப்பட்டுள்ளது. மலையடிப்பட்டி எனும் கிராமம் உருவாகி 320 ஆண்டுகள் (Tercentenary) நிறைவுற்றதன் (1700-2020) நினைவுமலராக இதனைக் கொள்ளலாம்.
1660 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய இயேசுசபை மறைப்பணியாளர்கள், அவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலைப் பயணங்கள், கிராமக் குடியேற்றம், பத்ரவாதோ சச்சரவுகள், அனைத்து பங்குத்தந்தையர்கள், புராதன சின்னங்கள், அரசியல் முன்னெடுப்புகள், சமூக வளர்ச்சிப்பணிகள், இருபால் இறையழைத்தல்கள், கல்வி நிறுவனங்கள் என இக்கிராமத்தின் நான்கு நூற்றாண்டு வரலாறு விரிவாக இவ்விணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
வெளியீடு
150 பக்கங்கள் கொண்ட, இவ்வரலாற்றுத் தொகுப்பை நூலாக வெளியிடும் வாய்ப்பிருந்தும், இணையதளமாக வெளியிடுவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு:
இக்கால தலைமுறை தயார்நிலை பயனாளிகளாகவும் (Readymade Consumers), மின்னனு திரை தலைமுறையாகவும் (Screen Generation) உள்ளனர். இச்சூழ்நிலையில், நூல்களைத் தேடி படிக்கும் நிலையை அவர்களிடம் எதிர்பார்க்க இயலாது. காலத்திற்கேற்ப நாம் மாறுவதே சிறப்பு.
இரண்டாவது முக்கிய காரணம் - பொருட்செலவு ஏதும் இல்லை; கடின உழைப்பும், நேரமும் தவிர.
19-08-2020 அன்று, கப்புச்சின் சபையில் நான் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்ட நாளின் நினைவாக, திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி ஆண்டகை அவர்களால் இவ்விணையதளம் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
இதனை நம் அனபு ஆயர் அவர்களின் கைகளால் வெளியிட்டதில் இரு பெருமைகள் உள்ளது:
ஆயர் அவர்கள் மலையடிப்பட்டியின் முன்னாள் பங்குத்தந்தை. 1993-1995 வரை இரு ஆண்டுகள், நான் நான்கு வயது சிறுவனாக இருந்த போது எனக்கு பங்குத்தந்தையாக பணியாற்றியதை நினைவு கூறுகின்றேன்.
ஆயர் அவர்களின் சொந்த ஊரான ந.பூலாம்பட்டி, மலையடிப்பட்டியின் சேய்ப்பங்கு என்ற வகையில், ஆயர் அவர்களும் மலையடிப்பட்டியின் மண்ணின் மைந்தராகவே கருதுகிறேன்.
எல்லாம் நன்மைக்கே!
கொரோனாவிலும் நன்மை நிகழ்ந்துள்ளது - நான் இந்த படைப்பினை உருவாக்க கடவுள் அருள்புரிந்துள்ளார். ஏப்ரல் மாதம் நிகழ வேண்டிய் இந்நிகழ்வு, இன்று நடைபெறுவதும் நன்மைக்கே - ஆயர் அவர்களால் இதனை வெளியிடும் வாய்ப்பினை இறைவன் ஏற்படுத்தியுள்ளார்.
நன்றி !
கடவுள் ஒவ்வொரு மனிதருக்குமான பணியை முன்னமே குறித்து வைத்திருக்கிறார். இக்காரியம், என் மூலம் நடைபெற வேண்டுமென்பது கடவுளின் விருப்பம் - இக்கொடைக்காகவும், இவ்வரிய பணி நிறைவுறும் வரையில் என்னை வழிநடத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
எனது அனைத்துவிதமான முயற்சிகளிலும், எனக்கு ஊக்கமளித்து, என்னை இறையழைத்தலில் உருவாக்கி வரும் எனது பெற்றோருக்கும், அமல அன்னை கப்புச்சின் மறைமாநிலத்திற்கும், பிரான்செஸ்கோ இறையியல் குழுமத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இதன் உருவாக்கத்தில் எனக்கு உதவிய, முழு ஒத்துழைப்பளித்த எனது பெரியப்பா, அருட்தந்தை. ஸ்டீபன் கஸ்பார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
முழுவரலாற்றினையும் படித்து, திருத்தங்கள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கி, மெருகேற்றிய ஜெயபால் ஆசிரியர் (மாமா) அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள். மேலும், இப்பணியில் மேலார்ந்த ஆலோசனைகள் வழங்கிய எனது குருமட வகுப்புத்தோழர்கள் சகோ. தியாகராஜன் க.ச. மற்றும் சகோ. ஆன்டனி ஜூலியஸ் க.ச. ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
உள்ளூர் தகவல் சேகரிப்பு மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவிய எனது இளைய சகோதரர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இறைவன் எனக்கு அருளிய அனைத்துக் கொடைகளுக்கும் நன்றி கூறியும், எனது பெற்றோர் வரப்பிரசாதம் & ஜோதிமணி மற்றும் எனது உடன் பிறப்புகள் ஜெரோம் பீட்டர் ராஜ், ஜெய பூரணி, ஜஸ்டின் கிருபாகரன் ஆகியோருக்கு நன்றிக்கடனாகவும் இவ்விணையதளத்தை அர்ப்பணிக்கின்றேன்......!
மறுவெளியீடு
ஆண்டவரின் அளவில்லா ஆசீரால், 21-08-2020 ஆம் நாள் எனக்கொரு முப்பெரும் விழாவாக அருளப்பட்டது:
திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டபின், திருச்சபையின் அங்கீகாரத்துடன் இறைப்பணியாற்ற முதல் முதலாக இந்நாளில் தான் ஆண்டவரின் பலி பீடம் ஏறினேன். இந்த வகையில் இதுவே எனக்கு முதல் திருப்பலி. இம்முதற் திருப்பலியே என் சொந்த மண்ணில் நிகழ்வது யாருக்கும் கிடைக்காத ஒரு ஆசீர்வாதம். மேலும், இத்திருப்பலியை என் பெரியப்பா Fr. ஸ்டீபன் கஸ்பார் அவர்களுடன் இணைந்து நிறைவேற்றியது ஆகச்சிறப்பு. (என் பெற்றோருக்கு திருமணம் செய்வித்து, எனக்கு திருமுழுக்கு, முதல் நற்கருணை முதலிய திருவருட்சாதனங்கள் வழங்கி, என்னை இறையழைத்தலில் ஊக்குவித்தவர் இவரே. சிறு வயது முதலே எனது பெரியப்பாவின் வாழ்வு முறைகளைக் கண்டே, நானும் குருவாக வேண்டும் எனும் ஆவல் என்னுள் பிறந்தது. நான் குருத்துவ வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு தந்தையவர்கள் தாம் முழுமுதற்காரணம் என்பது மறவாமல் குறிப்பிடப்பட வேண்டிய உண்மை)
மேலும், இதே திருப்பலியில் எனது இளைய சகோதரரின் (ஜெரோம் பீட்டர் ராஜ் ~ ஜெனிஃபர்) திருமணத்தை என் கைகளால் ஆசீர்வதித்து, நடத்தி வைக்கும் பாக்கியமும் கிட்டியது.
அத்தோடு, என் இளைய சகோதரி ஜெய பூரணி அவர்களின் மகளுக்கு (ஸ்டெஃபி ஜோ), நானே திருமுழுக்கு கொடுக்கும் நல்வாய்ப்பும் கிட்டியது.
இங்கனம் மூன்று திருவருட்சாதனங்களை தன் முதல் திருப்பலியிலேயே (திருத்தொண்டராக), தன் குடும்பத்திற்காக நிறைவேற்றும் பேறு யாருக்கும் கிடைக்காது. இவ்வருங்கொடைக்காக இறைவனுக்கு கோடன கோடி நன்றி.
இம்முப்பெரும் விழாவினை மேலும் சிறப்பித்து நினவுகூறும் விதமாக, பங்குத்தந்தை Fr. அம்புரோஸ் அடிகளாரின் அன்பு வற்புறுத்தலின் காரணமாக, இவ்விணையதளம் புத்தகமாக அச்சிடப்பட்டு, இறைமக்கள் அனைவருக்கும் இந்நூல் குறித்து அறிமுகம் செய்யும் விதமாக, ஒரு அடையாள நூல் வெளியீட்டு விழா அத்திருப்பலியிலேயே நிகழ்ந்தது.
மண்ணின் மைந்தரும், எனது பெரியப்பாவுமான Fr. ஸ்டீபன் கஸ்பார் அவர்கள் வெளியிட, பங்குத்தந்தை அவர்கள் இதன் முதல் பிரதியினைப் பெற்றுக்கொண்டார்கள். (தந்தை கஸ்பார் அவர்கள் இதனை வெளியிட்டது சாலச்சிறந்தது; ஏனெனில் இந்நூல் உருவாக்கத்தில் அவரின் ஒத்துழைப்பும், உதவியும், ஊக்கமும் அளவிட முடியாதது - ஒரு வகையில், தந்தையவர்களை இந்நூலின் துணை ஆசிரியராகவே குறிப்பிடலாம்)
மேலும், ஊர் நிர்வாகத்தினரிடம் ஒரு பிரதியும், Fr. T.A.S பாண்டியன் அவர்களிடம் ஒரு பிரதியும் அடையாள வெளியீடாக வழங்கப்பட்டது. இவ்விழாவினை ஏற்பாடு செய்த பங்குத்தந்தை அம்புரோஸ் அவர்களுக்கு எமது நன்றிகளைப் பதிவு செய்கின்றோம்.
பொறுப்பேற்பு
இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அல்லது கோவில்கள் மற்றும் கிளைப்பங்குகள் சார்ந்த அரிய பழைய புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள், கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பின் ஜோசப் அற்புத ராஜ் (www.josephar89@gmail.com | +91 8637668430) அவர்களைத் தொடர்புகொள்ளவும். உரிய ஆவண சரிபார்ப்புகளுக்குப் பின், அத்தகவல்கள் இணைக்கப்படும் அல்லது சரிசெய்யப்படும்.
காப்புரிமை
இத்தளத்தினை மற்றும் இதிலுள்ள தகவல்களை, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர மக்கள் அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், இதனை அச்சாக்கம் செய்யும் உரிமை ஆசிரியருக்கு மட்டுமே உண்டு. பிற்காலத்தில், இதனை நூலாக்கம் செய்யும் வாய்ப்புள்ளது.
நன்கொடை
இவ்விணையதளத்தை மேலும் மேம்படுத்தவும், தொடர்ந்து பராமரிக்கவும் (Domain Name Registration & Hosting), வருடாந்திரமாக கணிசமான நிதி செலவாகிறது. நம் மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் இப்பணி தொடர்ந்து நடைபெற உங்கள் நிதியுதவிகளை எதிர்பார்க்கின்றோம். நன்கொடை வழங்க விரும்புவோர் தொடர்புகொள்ளவும் : ஜெரோம் பீட்டர் ராஜ் (7845461070)
Infant Jesus Friary,
W-3/8K, Friary Street
230, Vallam, Alapakkam,
Chingleput – 603 002.
Ph: 044-27420780
Location: https://maps.app.goo.gl/kt648syXhzY8vvRU9
Email: www.josephar89@gmail.com
Mobile: +91 8637668430
Website: https://www.josephcap.com/
Youtube: www.youtube.com/@Fr.JosephArRa
Besse, Leon. La Mission Du Madure – Historique de ses Pangous. Trichinopoly : Impr. de la Mission catholique, 1914.
Letter of Antony Proenza, 09.09.1662.
Letter of Fr. Andres Freyre to Giovanni Paolo Oliva - 14-07-1667.
Letter of Fr. Andres Freyre to Giovanni Paolo Oliva - 10-07-1678.
Fr. Saint –Cyr, life of Fr. Perin, pp. 68-86
Fr. தேவராஜ், S. காலச்சுவடுகள் - திருச்சிராப்பள்ளி கிறிஸ்தவத்தின் வரலாறு. திருச்சி : சிகரம் பதிப்பகம், மே-2015. (https://bit.ly/காலச்சுவடுகள்)
Fr. Devaraj, S. The History of Trichy Diocese (Trichy: Oct, 2011) - On the occasion of 125th Jubilee Celebration of Trichy Diocese).
Fr. அந்தோணிசாமி, S. ந.பூலாம்பட்டி - மக்கள் வரலாறு. பூலாம்பட்டி : ஆசிரியருக்கே, 18-07-2017. (https://bit.ly/பூலாம்பட்டி)
Fr. ஜோசப், S. தோமா மலைமலர் - பாடற்புத்தகம். முன்னுரைப் பகுதிகள். (https://bit.ly/மலைமலர்)
Fr. அகஸ்தீன், K. A. பாஸ்கா நாடகம். திருச்சி : தமிழ் இலக்கிய கழகம், 2020. (https://bit.ly/பாஸ்கா)
ஆனந்த், மதுரை (தொகுப்பாசிரியர்). பாலஸ்தீனம் முதல் பாண்டிய நாடு வரை - இந்திய தமிழக மதுரைத் திருச்சபை வரலாறு. மதுரை : மதுரை உயர் மறைமாவட்டம், ஜூன் 2013.
Stephen, S. Jeyaseela. Caste, Catholic Christianity, and the Language of Conversion: Social Change and Cultural Translation in Tamil Country 1519-1774. Gyan Publishing House, 2008. p.62.
Nand, Brahma. “Studies in the Nature and causes of Famine in Colonial India.” (03-04-2011) (https://bit.ly/381mLw3)
ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், ப.30. (https://bit.ly/3eZK78c)
Manual of the Administration of the Madras Presidency, Vol. I, Ecclesiastical, 1885. p. 626.
Chandler, J.S. History of Jesuit Mission. Madras : M. E. Publishing House, 1909. p.9.
Caldwell, R. A History of Tinnevelly, New Delhi, 1982. p.60.
Cannell, Fenella. The Anthropology of Christianity. Durham : Duke University Press, 2006. p.110-111. (https://bit.ly/386Il2s)
Worcester, Thomas. College of the Holy Cross. Massachusetts: Cambridge University Press, 2017. pp 594-594.
மலையடிப்பட்டி கல்வெட்டுகள் (https://bit.ly/கல்வெட்டுக்கள்)
Rosetti, J. Theresa. “History of Roman Catholic Diocese of Tiruchirappalli (1886-1986) - A Study” - Doctoral Theseis. Trichy : St. Joseph’s College, July 2013. (https://bit.ly/2VQf07v & https://bit.ly/2Au41ce)
DNL. “MADURA MISSION - HISTORICAL NOTES,” in Arch Diocese of Madurai News Letter. June 2019. p. 14. (https://bit.ly/3ivWXNn)
L. P. A. No. 134 of 1952: An appeal under the Letters Patent against the judgment of Subba Rao J. in C.M.P. No. 13519 of 1950 (https://bit.ly/31Nm8VJ)
Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1 in The Madras Tercentenary Commemoration Volume. Madras: Humphrey Milford - Oxford University Press, 04-08-0939. p 380. (https://bit.ly/2Z0U5iU) & (https://bit.ly/31e2ZMu) & Official Vatican Concordat : (https://bit.ly/3fT530G)
History of Madurai Arch Diocese, உத்தமபாளையம் (https://bit.ly/2Z53APn)
Diocese of Thiruchirapally, (http://www.trichydiocese.org/)
Fr. ஸ்டீபன் கஸ்பார், திண்டுக்கல் மறைமாவட்டம். (செவி வழி தகவல்கள்)
ஜெயபால் ஆசிரியர், மலையடிப்பட்டி. (செவி வழித் தகவல்கள்)
மலைத்தளிர் ஆவணத்தொகுப்பு (தொகுத்தவர் : Fr. ஸ்டீபன் கஸ்பார்) (https://bit.ly/மலைத்தளிர்கள்)