மலையடிப்பட்டி மறைத்தள வரலாற்றில் ஆலயங்களும், ஆன்மீகமும் செழித்து வளர்ந்ததைப் போன்று அழைத்தல் வாழ்வும் ஆலமரமாய் செழித்து வளர்ந்தது. இறையழத்தலை ஏற்று, மறைபணியாற்ற பல குடும்பங்களும் தங்கள் குழந்தைச் செல்வங்களை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
குருக்களாக 11 பேரும் மற்றும் கன்னியர்களாக 17 பேரும், திருஅவையில் பணியாற்றி இறையடி சேர்ந்துள்ளனர். மேலும் 15 குருக்கள் மற்றும் 23 கன்னியர்கள் பல்வேறு நிலைகளிலும், இடங்களிலும் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை 'மலைத்தளிர்கள்' எனும் புனைப்பெயரிட்டு அழைக்கிறோம்.
இவர்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புகளை அறிய கீழுள்ள இணைப்புகள் மூலம் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்லவும்....
பின் குறிப்பு:
'மலைத்தளிர்கள்' குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து, ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கியவர் அருட்தந்தை. ஸ்டீபன் கஸ்பார் (மண்ணின் மைந்தர்) அவர்கள். இவரே மலைத்தளிர்களின் தற்போதைய மூத்த குரு. தந்தையவர்களின் இந்த அரிய முயற்சிக்கும், கடின உழைப்பிற்கும் உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்....!
"எல்லாம் நன்மைக்கே"
Fr. ஸ்டீபன் கஸ்பார்,
குமரன் திருநகர் பங்குத் தந்தை,
திண்டுக்கல் மறைமாவட்டம்.
Checkout His Sermons Here: