இந்தியாவின் கிறிஸ்தவ மறைபரப்பு வரலாறு அப்போஸ்தலரான புனித தோமையாரின் காலத்திற்கு எடுத்துச் செல்கிறது. அப்போஸ்தலர்கள் அனைவரும் மறைபரப்பு பணிக்காக பல்வேறு தேசங்களுக்கு பயணம் சென்ற போது, கி.பி. 52-இல் புனித தோமையார் இந்தியாவிற்கு வருகை தந்தார். கேரளாவின் (அன்றைய சேர நாடு) கிராங்கனூரிலிருந்து, மலபார் பகுதிகளை மையமாகக் கொண்டு பணி செய்து, மைலாப்பூர் நோக்கி பயணம் செய்து சென்னை சின்னமலையில் கி.பி. 72-இல் மறைசாட்சியாக மரித்தார்.....மேலும் படிக்க >>>
மணப்பாறையை நெருங்கியவுடன் அதன் அருகே உள்ள விடத்திலாம்பூண்டி (இன்றைய விடத்திலாம்பட்டி) எனும் சிற்றூர் பாதுகாப்பானது என்பதை அறிந்த ஃப்ரொவென்சா அடிகளார், கிறிஸ்தவர்களைக் அவ்வூரில் குடியேற்றினார். விடத்திலாம்பூண்டி திருச்சிராப்பள்ளியிலிருந்து 20 கல் தொலைவில் உள்ளது. மரங்கள் அடர்ந்து. குன்றுகள் சூழ்ந்து இயற்கையிலேயே ஓர் அரணாக அது விளங்கியது. மேலும் அப்பகுதியில் வாழ்ந்தோர் பெரும்பாலானோர் வறியவர்கள். அதனால் கொள்ளையடிக்கும் நோக்கில் அந்நியப் படைகள் அங்கு வருவதற்கும் வாய்ப்பில்லை.....மேலும் படிக்க >>>
மக்கள் ஜமீன் தாரின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, முள்ளிப்பாடியில் குடியேறினர். இதற்காக, 1661-இல் அங்கு ஒரு நிலையான சிற்றாலயமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டும் பணி தொடங்கியது. அதுமுதல் தொடர்ந்த அடுத்த 108 ஆண்டுகள் (1661-1708), இது முள்ளிப்பாடி மறைத்தளமாகவே அறியப்பட்டது. இந்த மறைத்தளத்தின் தற்போதைய, சரியான இடத்தைக் குறித்து ஆராயும் போது, தற்போது ஆவாரம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள முள்ளிப்பாடி கிராமமாக இருக்கக் கூடும் என்ற ஐயம் எழலாம். ஆனால் வரலாற்றின் படி, இந்த முள்ளிப்பாடி கிராமமானது மிகப்பிற்கால குடியேற்றமாகும். எனவே இந்த முள்ளிப்பாடியாக இருக்க வாய்ப்பில்லை.....மேலும் படிக்க >>>
1708-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இயேசு சபைத் துறவியரின் மடல்கள் முள்ளிப்பாடி மறைத்தளத்தின் புதிய பெயரான ‘மலையடிப்பட்டி’ பணித்தளத்தைப் பற்றிக் கூறுகின்றன. இதுவே முதல் முதலாக ‘மலையடிப்பட்டி’ என்னும் பெயர் வரலாற்று ஏடுகளில் பதியப்பட்ட காலம்.
முந்தைய வரலாற்றில் குறிப்பிட்டது போல, முள்ளிப்பாடியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், சிலகாலம் மறைவிடங்களில் வாழ்ந்து (20 Years - No Records Found), பின்னர் 1700-களிலிருந்து புலம் பெயர்ந்து, முள்ளிப்பாடிக்கு தெங்கிழக்கே, 300 மீட்டருக்கு அப்பாலுள்ள தற்போது கிராமம் அமைந்துள்ள பகுதிகளில் குடியேறியிருக்க வேண்டும். மலைக்கற்கள் புரண்டு வீடுகள் மீது விழும் அபாயத்தாலும், உடல் நலச்சீர்கேடுகளை முன்னிட்டும் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். பின்னாட்களில், இக்கிராமம் ‘மலையடிப்பட்டி’ என்ற பெயர் பெற்றது.....மேலும் படிக்க >>>
இதுவரை கூறப்பட்டுள்ள தொடக்க வரலாற்றுப் பதிவுகளை மலையடிப்பட்டி வரலாற்றின் முதல் அத்தியாயமாகக் கொள்ளலாம். இந்த முதல் அத்தியாய காலங்களில் பணியாற்றிய அனைத்து குருக்களும், பழைய மதுரை மறைத்தளத்தைச் சார்ந்த போர்த்துக்கீசிய இயேசு சபைக் குருக்களாவர். இவர்கள் பதுரவாதோ அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு வந்தனர்.
மலையடிப்பட்டி மறைத்தலத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் பிற்கால வரலாறு குறித்து அறிய வேண்டுமெனில், அதனை இங்கு அமைந்துள்ள கோவில்களின் வரலாற்றுப் பின்னனியாகவும், இந்திய கத்தோலிக்க திருச்சபையில் ஏற்பட்ட மாற்றங்களில் பின்னனியிலேயே தொகுக்க இயலும். இதனடிப்படையில் இந்திய மற்றும் தமிழக கத்தோலிக்க மறைபரப்பு வரலாற்று நகர்வுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது......மேலும் படிக்க >>>
இவ்வாறு உருவான புனித சவேரியார் பங்கின் தொடக்க காலத்தில், முதல் முதலாக மூன்று ஃபிரஞ்சு தேச இயேசு சபை மறைபோதகர்கள் அடுத்தடுத்து (1838-1843), பல்வேறுபட்ட நிலையிலும், வகையிலும் சிறந்த அரும் பெரும் பணியாற்றியுள்ளனர். இம்மறைத்தளத்தின் இரண்டாம் அத்தியாத்தின் தொடக்கப் புள்ளிகள் இவர்களே என்பது ஆணித்தரமான உண்மை.
இக்குருக்களின் பணிக்காலத்தின் போது தான் முக்கியமான வரலாற்று முன்னெடுப்புகள் ஏற்பட்டுள்ளன: தூய சவேரியார் ஆலயத்தின் முதல் கூரை ஆலயமும், சுற்றுச் சுவரும் ஒரே இரவில் கட்டப்பட்டது. மேலும், 1840-இல் மலைமேல் இதற்கு முன்பு இருந்த கூரை சிற்றாலயம் (1714 - இல் கட்டப்பட்டது) இடிக்கப்பட்டு, கற்களாலான ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டு, புனித தோமையார் சிற்றாலயமாக மறுஅர்ப்பணம் செய்யப்பட்டது......மேலும் படிக்க >>>
08-01-1938-இல் திருச்சி புதிய மறைமாவட்டமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது (மதுரை தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டது), இவ்விரு ஆலயங்களும் ஒரு குடையின் கீழ் கொணரப்பட்டு, 28-01-1934-இல் புதிய மலையடிப்பட்டி பங்காக செயல்படுவதற்கான ஆணை அப்போதைய ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியர் (Augustine Faisandier) ஆண்டகையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய திருச்சி மறைமாவட்டத்தின் அங்கமாக இன்று வரை செயல்பட்டு வருகிறது.....மேலும் படிக்க >>>
08-01-1938-இல் திருச்சி புதிய மறைமாவட்டமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது (மதுரை தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டது), இவ்விரு ஆலயங்களும் ஒரு குடையின் கீழ் கொணரப்பட்டு, 28-01-1934-இல் புதிய மலையடிப்பட்டி பங்காக செயல்படுவதற்கான ஆணை அப்போதைய ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியர் (Augustine Faisandier) ஆண்டகையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய திருச்சி மறைமாவட்டத்தின் அங்கமாக இன்று வரை செயல்பட்டு வருகிறது.....மேலும் படிக்க >>>
Historical evidences of this mission are from the end of the year 1659. During this time the troops of the Mysore king besieged Trichirapalli and fought with the Nayakas of Madurai. This war was known as ‘The War of Noses’. The christians in the neighbourhood marched towards south west under the leadership of Fr. Antony De Proence, popularly known as ‘Paramananda Samaigal’ in search of refuge.
They took shelter at Vidatilampondi - a village near Manapparai and 20 miles from Tiruchirapalli. Fr. Anthony De Proence approached the Zamindar of Kumaravadi and paid his respect. Amidst great opposition from the people, with the permission of the Zamindar, he built a small chapel and a house for him at Vidathilampundi and solemnly celebrated Easter in 1660. Due to jealousy, the local villagers burnt the chapel and house one midnight....Read More>>>